» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

எனது வீட்டில் பணம், தங்கம் பறிமுதலா? முதல்வர் பழனிசாமி நிரூபிக்கத் தயாரா? துரைமுருகன் சவால்

வெள்ளி 3, மே 2019 5:27:21 PM (IST)

"எனது வீட்டில் பணம், தங்கம் கைப்பற்றப்பட்டதாக முதல்வர் பழனிசாமி கூறிய குற்றச்சாட்டை அவரால் நிரூபிக்க முடியுமா?" என்று திமுக பொருளாளர் துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சூலூர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, என்னைப் பற்றி பேசுகையில், புளுகு மூட்டைகளை கொட்டியுள்ளார். அதை, நாளிதழ்கள் மூலம் பார்த்தபோது, அவரை நினைத்து பரிதாபப்படுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.

"இவருக்கு (அதாவது எனக்கு) சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி 12 கிலோ தங்கம், ரூ.13 கோடி பணத்தை கைப்பற்றியது. அவருக்கு எந்த வகையில் வந்த பணம் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்" என்று பழனிசாமி பேசியிருந்தார். முதல்வர் இந்த அளவுக்கு விவரம் அற்றவராக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. அவர் கூறியிருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.

1. எங்களுடைய வீடு, கல்லூரியில் நடத்திய சோதனையின் போது ரூ.10 லட்ச ரூபாய் மட்டுமே கைப்பற்றப்பட்டது. அவர் கூற்றுப்படி ரூ.13 கோடி அல்ல. அவ்வாறு ரூ.13 கோடி எடுத்த இடம் எங்களுடையது  அல்ல.2. 12 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் கூறுகிறார். இந்த சோதனையில் தங்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதுதான் உண்மை. வருமான வரித்துறையினர் கொடுத்துள்ள பஞ்சன் நாமாவைப் பார்த்தாலே இது தெரியும்.

அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும் ஒரு இடத்தில் இருக்கும் முதல்வரே ஏதும் தெரியாத மனிதனைப் போல பேசியிருப்பது கேலிக்குரியதாகும். கடைசியாக அவருக்கு ஒரு சவால்.. எங்களுக்கு சொந்தமான இடங்களில் 12 கிலோ தங்கம், 13 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாக முதல்வர் கூறிய குற்றச்சாட்டை அவர் நிரூபித்தால் நான் என் பதவியை விட்டு விலகுகிறேன். இல்லையென்றால் முதல்வர் பழனிசாமி தனது பதவியில் இருந்து விலகத் தயாரா? என்று துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory