» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஜன.7-ம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், பொங்கல் பரிசு வழங்கப்படும் : அரசாணை வெளியீடு

வெள்ளி 4, ஜனவரி 2019 5:53:34 PM (IST)

ஜன.7-ம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக அளிக்கப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிவித்தார். எனினும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அங்கு இத்திட்டம் செயல்படுத்தப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார். 

இந்த திட்டத்தால் 2 கோடி மக்கள் பயனடைவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பொங்கல் பரிசு வழங்குவதற்கான நிதி ஒதுக்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 7-ம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்துடன் பொங்கல் பொருட்களும் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory