» சினிமா » செய்திகள்

பெப்சி-தயாரிப்பாளர்கள் மோதல்: சூர்யா, கார்த்தி உள்பட 10 நடிகர்களின் பட ஷூட்டிங் பாதிப்பு

வெள்ளி 27, ஜனவரி 2012 5:42:38 PM (IST)


பெப்சி - தயாரிப்பாளர்களுக்கு இடையே நடக்கும் மோதலால் சூர்யா நடிக்கும் படம் உள்ளிட்ட 10க்கும் அதிகமான நடிகர்களின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் முடங்கி உள்ளது.

புதிய சம்பளம் நிர்ணயிப்பது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கும் (பெப்சி), தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தன்னிச்சையாக பெப்சி புதிய சம்பள விகிதத்தை நிர்ணயித்துள்ளது. அதை ஏற்க முடியாது. வெளியாட்களை வைத்து ஷூட்டிங் நடத்துவோம் என்று தயாரிப்பாளர்கள் கூறினர்.

அதை பெப்சி ஏற்கவில்லை. வெளியாட்களை வைத்து வேலை செய்தால் அதை தடுப்போம். புதிய சம்பளத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் எம்ஜிஆர் சமாதியில் உண்ணாவிரதம் இருப்போம் என்று பெப்சி அறிவித்துள்ளது. இதனால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல் காரணமாக சூர்யா நடிக்கும் மாற்றான், கார்த்தி நடிக்கும் சகுனி, பிரபு சாலமன் தயாரிக்கும் சாட்டை உள்ளிட்ட 10க்கும் அதிகமான படங்களின் ஷூட்டிங் முடங்கி உள்ளது. சினிமா ஸ்டுடியோக்களும் ஷூட்டிங் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கின்றன. இப்படங்களுக்காக சென்னை மற்றும் வெளியூர்களில் பல லட்சம் ரூபாய் செலவில் போடப்பட்டுள்ள செட்டிங்குகளும் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தவிர கோடிக்கணக்கில் பணம் முடங்கி உள்ளது. இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா இயக்கும், அன்னக்கொடியும் கொடி வீரனும் பட ஷூட்டிங் மட்டும் தேனியில் நடந்து வருகிறது. தயாரிப்பாளர்கள் நிர்ணயித்துள்ள சம்பளத்துக்கு உட்பட்டு வேலை செய்பவர்களை வைத்தே இதன் ஷூட்டிங் நடக்கிறது என்று பட குழுவினர் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory