» சினிமா » செய்திகள்
எம்.ஜி.ஆர் படத்தை நெஞ்சில் டாட்டூ குத்திய விஷால்
புதன் 25, ஜனவரி 2023 11:11:33 AM (IST)
நடிகர் விஷால் தனது நெஞ்சில், எம்.ஜி.ஆர் படத்தை டாட்டூவாகக் குத்தியுள்ளார்.
‘லத்தி' படத்தை அடுத்து, ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்து வருகிறார், விஷால். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவரும் 2 வேடங்களில் நடிக்கின்றனர். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இதில், ஒரு கேரக்டரில் எம்.ஜி.ஆர் ரசிகராக விஷால் வருகிறார். இதற்காக அவர், தனது நெஞ்சில், எம்.ஜி.ஆர் படத்தை டாட்டூவாகக் குத்தியுள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.