» சினிமா » செய்திகள்

பெண் நிருபரிடம் ஆபாசமாக பேசிய நடிகர் கைது

செவ்வாய் 27, செப்டம்பர் 2022 10:49:29 AM (IST)

நேர்காணலின்போது பெண் நிருபரிடம் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த மலையாள நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலையாள சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் ஸ்ரீநாத் பாசி. இவர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த சட்டம்பி என்ற படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இதையொட்டி ஒரு யூடியூப் சேனலுக்கு ஸ்ரீநாத் பாசி பேட்டி கொடுத்தார். ஒரு பெண் நிருபர் அவரிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அவர் கேட்ட சில கேள்விகள் ஸ்ரீநாத் பாசிக்கு பிடிக்கவில்லை.

இதனால் கோபமடைந்த அவர், கேமராவை ஆப் செய்யுமாறு கூறிவிட்டு, அந்த பெண் நிருபரிடம் ஆபாசமாக பேசி அவருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் நிருபர் கொச்சி மரடு போலீசில் புகார் செய்தார். ஸ்ரீநாத்திடம் 2 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பின் அவரை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory