» சினிமா » செய்திகள்

கமல், விஜய் பட வில்லன் நடிகர் சலீம் கவுஸ் மறைவு

வியாழன் 28, ஏப்ரல் 2022 4:37:58 PM (IST)

வெற்றிவிழா, சின்னக்கவுண்டர், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் சலீம் கவுஸ் உடல் நலக்குறைவால் காலமானார். 

சென்னையில் பிறந்த சலீம் கவுஸ், மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்.  வேட்டைக்காரன், சின்ன கவுண்டர், வெற்றி விழா, திருடா திருடா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே நீங்கா இடம்பிடித்த நடிகர் சலீம் கவுஸ். இது தவிர, பாலிவுட் படங்களான ஸ்வர்க் நரக், மந்தன், கலியுக், சக்ரா, சரண்ஷ், மோகன் ஜோஷி ஹாசிர் ஹோ, திரிகல், அகாத், த்ரோஹி, சர்தாரி பேகம், கொய்லா, சிப்பாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

திரைத்துறை மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் பல தொடர்களில் நடித்துள்ளார்.  மும்பையில் வசித்து வந்த அவர், உடல்நலக் குறைவால் காலாமானார். அவரது மறைவு, ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வெற்றி விழா படத்தில் ஜிந்தா என்னும் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை வெகுவாக வசீகரித்த சலீம் கவுஸ், தமிழ் சினிமாவின் ரகுவரன் உள்ளிட்ட கவனிக்கத்தக்க நடிகர்களில், வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர் என்பது நினைவுகூரத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory