» சினிமா » செய்திகள்

தமிழக முதல்வரிடம் நடிகர் விவேக் மனைவி கோரிக்கை!

திங்கள் 25, ஏப்ரல் 2022 5:20:12 PM (IST)



மறைந்த நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு விவேக் பெயரை சூட்ட வேண்டுமென்று தமிழக முதல்வரிடம் அவரது மனைவி கோரிக்கை மனு அளித்தார். 

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி இன்று சந்தித்தார். அப்போது மறைந்த நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்கிற கோரிக்கை அடங்கிய மனுவை அவர் அளித்தார். உடன் விவேக்கின் மகள் அமிர்தாநந்தினி, விவேக் பசுமை கலாம் இயக்கத்தின் நிர்வாகிகள் முருகன், லாரன்ஸ், அசோக் ஆகியோர் உள்ளனர். 

பசுமைக் காதலனான நடிகர் விவேக் முதலாம் ஆண்டு நினைவு நாள் அண்மையில் அனுசரிக்கப்பட்டது. நடிகா் விவேக் மரம் நடுதலை தன் வாழ்நாளில் மிகப்பெரிய பணியாகவும் மரங்களின் மீது அன்பு கொண்டவராகவும் விளங்கினாா். சுமாா் ஒரு கோடிக்கும் அதிக மரங்களை அவா் நட்டதோடு அவற்றை பராமரிக்கவும் நடவடிக்கை எடுத்தவா் என்பது  குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory