» சினிமா » செய்திகள்

பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த் திடீர் மரணம்

புதன் 10, நவம்பர் 2021 5:09:55 PM (IST)

புற்று நோய்க்கு சிகிச்சைப் பெற்றுவந்த பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த் திடீரென மரணமடைந்தார்.

பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த். பிரபுதேவா, ராஜூ சுந்தரம் நடனக் குழுவில் பணியாற்றி வந்த இவர், ’காதல் தேசம்’ படம் மூலம் நடன இயக்குநர் ஆனார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ’முஸ்தபா… முஸ்தபா’, ’கல்லூரிச் சாலை’பாடல்கள் அப்போது வரவேற்பைப் பெற்றன. அதன்பிறகு பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்த கூல் ஜெயந்த், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார். 

அஜித், விஜய், மம்முட்டி உள்பட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ள கூல் ஜெயந்த், புற்றுநோய் காரணமாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை  பலனின்றி அவர் உயிரிழந்தார். மேற்கு மாம்பலத்தில் உள்ள அவர் வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருடைய இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்கிறது. இயக்குநர் பாரதிராஜா டடுவிட்டர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாசத்துக்குரியவனே, உன் மறைவு பேரதிர்ச்சிடா, மாஸ்டர் கூல் ஜெயந்த்யை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்’ என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory