» சினிமா » செய்திகள்

வெளிநாடுகளில் ரிலீஸ்: புதிய சாதனை படைத்த ரஜினியின் ‘அண்ணாத்த’

புதன் 3, நவம்பர் 2021 10:48:56 AM (IST)

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினி தற்போது சிவா இயக்கியுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாநகரங்களில் பெரும்பாலான திரையரங்குகளில் 'அண்ணாத்த' படத்தின் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.இந்நிலையில், அண்ணாத்த படத்தை வெளிநாடுகளில் 1119 திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

அதிகபட்சமாக அமெரிக்காவில் 572 திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. இதுதவிர, ஐக்கிய அரபு நாடுகளில் 83, மலேசியாவில் 110, இலங்கையில் 60, ஆஸ்திரேலியா 70, நியூசிலாந்தில் 14, ஐரோப்பிய நாடுகளில் 135, இங்கிலாந்தில் 35, சிங்கப்பூரில் 23, கனடாவில் 17 என மொத்தமாக 1119 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இதன்மூலம் வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்கிற பெருமையை 'அண்ணாத்த' திரைப்படம் பெற்றுள்ளது.

மேலும் பிரான்ஸிலும் அதிக திரையரங்கில் வெளியாகும் தமிழ் படம் என்ற பெருமையையும் அண்ணாத்த கைப்பற்றியுள்ளது. இது மட்டுமல்லாமலல் உலகின் பெரிய திரையரங்கான ஆஸ்திரேலியாவில உள்ள சிட்னியில் அமைந்துள்ள தி பேனாசோனிக் ஐமேக்ஸ் திரையரங்கில் அண்ணாத்த படம் வெளியாகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory