» சினிமா » செய்திகள்

புனித் ராஜ்குமார் உதவிய 1800 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றார் விஷால்

திங்கள் 1, நவம்பர் 2021 12:14:17 PM (IST)



புனித் ராஜ்குமார் உதவியில் படிக்கும், 1800 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்க உள்ளதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். 

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், சிறந்த நடிகராக வலம் வந்தது மட்டுமின்றி, பல்வேறு சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். 45 இலவசப் பள்ளிகள், 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 19 கோசாலை மற்றும் 16 முதியோர் இல்லங்கள் ஆகியவற்றை நடத்தி வந்த புனித், 1800 மாணவர்களின் கல்விச் செலவையும் ஏற்றிருந்தார். 

இந்நிலையில், புனித் ராஜ்குமார் உதவியில் படிக்கும், 1800 மாணவர்களின் கல்விச் செலவை அடுத்தாண்டு முதல் தான் ஏற்க உள்ளதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற எனிமி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனை கூறினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில், மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு எனிமி படக்குழுவினர் இரங்கல் தெரிவித்ததோடு, அவரது புகைப்படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். விஷால் நடித்துள்ள எனிமி படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory