» சினிமா » செய்திகள்

படப்பிடிப்பில் துப்பாக்கிச் சூடு: ஒளிப்பதிவாளர் பலி

வெள்ளி 22, அக்டோபர் 2021 4:16:27 PM (IST)ஹாலிவுட் சினிமா படப்பிடிப்பின் போது ஒளிப்பதிவாளர் பலியான விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹாலிவுட்டில் ஜோயல் சோசா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரஸ்ட்’. இப்படத்தின் படப்பிடிப்பு மெக்சிகோவில் நடைபெற்று வந்தது. நேற்று நடிகர் அலெக் பால்ட்வின் நடிக்கும் ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் அலெக் பால்ட்வின் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் உயிரிழந்தார். 

மேலும் இயக்குனர் ஜோயல் சோசாவும் படுகாயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவத்தை அடுத்து ‘ரஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory