» சினிமா » செய்திகள்

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் பட்டம் வென்றார் ஸ்ரீதர் சேனா

திங்கள் 27, செப்டம்பர் 2021 12:39:31 PM (IST)



சூப்பர் சிங்கர் 8 இறுதிச் சுற்றில் போட்டியிட்ட ஸ்ரீதர் சேனா, முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

விஜய் டிவியில் 2006ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஜூனியர், சீனியர் என இரு பிரிவுகளில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 8 ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனின் இறுதிப் போட்டியில் நேற்று முத்து சிற்பி, பரத், அனு ஆனந்த், அபிலாஷ், ஸ்ரீதர் சேனா, மானசி ஆகிய 6 பேர் போட்டியிட்டனர்.

இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற இசையமைப்பாளர்கள் அனிருத், சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் மாணிக்கம் விநாயகம், சித்ரா, பென்னி தயால், எஸ்.பி.பி.சரண், உன்னி கிருஷ்ணன், அனுராதா உள்ளிட்டோர் முன்பு 6 போட்டியாளர்கள் பாடினார்கள். இதில் நடுவர்கள் முடிவு மற்றும் மக்களின் வாக்குகள் அடிப்படையில், முதலிடத்தை ஸ்ரீதர் சேனா(ரூ. 10 லட்சம்), இரண்டாம் இடத்தை பரத்(ரூ. 3.5 லட்சம்), மூன்றாம் இடத்தை அபிலாஷ்(ரூ. 2 லட்சம்) வென்றனர். மேலும், மாற்றத்திற்கான போட்டியாளர் என்ற விருதை முத்து சிற்பி(ரூ. 1 லட்சம்) பெற்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory