» சினிமா » செய்திகள்

அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

வெள்ளி 10, செப்டம்பர் 2021 12:14:31 PM (IST)



ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ’அண்ணாத்த’ படத்தின் முதல் பார்வை இன்று (செப்-10)  வெளியாகியிருக்கிறது . 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில்  நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'அண்ணாத்த'.  படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்திருந்தால் இதன் அடுத்தகட்ட அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று படத்தின் முதல் பார்வை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் முதல் பார்வை வெளியாகி இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. மேலும்  இன்று மாலை 6 மணிக்கு படத்தின் மோஷன் போஸ்டரையும் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறார்கள். இரண்டும் ஒரே நாளில் வெளியாவதால் இச்செய்தியை ரஜினி ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். இப்படம் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory