» சினிமா » செய்திகள்

கால் நூற்றாண்டுக்கு பின் இணையும் பிரபுதேவா - அரவிந்த் சாமி?

திங்கள் 6, செப்டம்பர் 2021 5:55:36 PM (IST)

ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்கு பின் பிரபுதேவாவும், அரவிந்த் சாமியும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு. இவர் இயக்கத்தில் தற்போது ‘மாநாடு’ திரைப்படம் உருவாகி வருகிறது. சிம்பு நாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கும் படத்தில் பிரபுதேவாவும், அரவிந்த் சாமியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கிச்சா சுதீப் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர்கள் பிரபுதேவாவும், அரவிந்த் சாமியும் ஏற்கனவே கடந்த 1997-ம் ஆண்டு வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory