» சினிமா » செய்திகள்

6 மணி நேரத்தில் ரூ.25 லட்சம் ஜெயித்தேனா? - நடிகர் புகழ் விளக்கம்

திங்கள் 6, செப்டம்பர் 2021 3:14:48 PM (IST)

LOL நிகழ்ச்சியில் 6 மணி நேரத்தில் ரூ.25 லட்சம் ஜெயித்ததாக வெளியான தகவலுக்கு புகழ் விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் டிவியின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் நடிகராக வலம் வருபவர் புகழ். சமீபத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் LOL 'எங்க சிரி பார்ப்போம்' என்ற நிகழ்ச்சி வெளியானது. இதில் கலந்துகொண்டு 6 மணி நேரத்தில் 25 லட்ச ரூபாயை புகழ் ஜெயித்ததாகத் தகவல் வெளியானது. 

இதனிடையே, சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட புகழ், பேசியதாவது: "நிறைய படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன். சந்தானம் அண்ணனுடன் 2 படங்கள் நடித்து முடித்து விட்டேன். அதன் வெளியீட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். இதர படங்களுடைய அப்டேட் வந்து கொண்டிருக்கிறது. பெரிய படங்களுடைய அப்டேட்டை அவர்களே வெளியிடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். கண்டிப்பாக அனைவருமே சந்தோஷமாக இருப்பீர்கள். அந்த மாதிரியான படங்களில்தான் நடித்துள்ளேன். 

'எங்க சிரி பார்ப்போம்' நிகழ்ச்சியில் ஜெயித்தேன். அந்தப் பரிசுத் தொகையை இருவருக்குப் பிரித்துக் கொடுத்தார்கள். மொத்த பரிசுத் தொகை ரூ.25 லட்சத்தில் எனக்கு ரூ.12.5 லட்சம் வந்தது. அதில் டி.டி.எஸ் பிடித்ததுப் போக மீதி ரூ.7 லட்சம்தான் வந்தது. அனைத்துச் செய்திகளிலும் ரூ.25 லட்சம் ஜெயித்தேன் என்று போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். என் கைக்கு வந்தது ரூ.7 லட்சம் மட்டுமே. அதையுமே ஊரில் வீடு கட்டக் கொடுத்துவிட்டேன். பிக் பாஸ் வீட்டிற்கு எல்லாம் செல்லவில்லை. என் வீட்டிற்குத்தான் செல்லவுள்ளேன். என் ரசிகர்களால்தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். என் உயிர் பிரியும் வரை அவர்களைச் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பேன்" இவ்வாறு புகழ் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory