» சினிமா » செய்திகள்

பிக் பாஸ் பட்டம் வென்ற பிரபல நடிகர் மரணம்!

வியாழன் 2, செப்டம்பர் 2021 5:21:49 PM (IST)



ஹிந்தியில் பிக் பாஸ் பட்டம் வென்ற நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 40.

ஹிந்தி பிக் பாஸ் 13வது சீசனில் பட்டம் வென்றவர் நடிகர் சித்தார்த் சுக்லா. 2008 முதல் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.  பிறகு 2014-ல் பாலிவுட்டில் அறிமுகமானார். 2 ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் மரணமடைந்துள்ளார் சித்தார்த் சுக்லா. சித்தார்த் சுக்லாவுக்கு தாயும் இரு சகோதரிகளும் உள்ளார்கள். அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory