» சினிமா » செய்திகள்

அவதூறு வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு ஜாமின்

வெள்ளி 27, ஆகஸ்ட் 2021 4:05:02 PM (IST)

அவதூறு வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு ஜாமின்  வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகை மீரா மிதுன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது குறித்த வீடியோ வைரல் ஆன நிலையில் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுன் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை செய்த காவல்துறையினர் அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

நீதிபதி மீரா மிதுனை வரும் 27ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.  பின்னர் மீரா மிதுன் வாய்தவறிப் பேசிவிட்டதாகக் கூறி ஜாமின் தாக்கல் செய்தால், ஆனால் அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக ஜோ மைக்கேல் என்பவர் தொடந்துள்ள வழக்கில் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட மீரா மிதுனுக்கு இன்று எழும்பூர் நீதிமன்றம் ஜாமின்  வழங்கி உத்தரவிட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory