» சினிமா » செய்திகள்
கரோனா ஒழிந்தால்தான் படப்பிடிப்பு: ரஜினி, அஜித் வழியில் சூர்யா முடிவு!!
சனி 27, ஜூன் 2020 3:37:17 PM (IST)

தமிழகத்தில் கரோனா வைரஸ் முற்றிலும் ஒழிந்தால்தான் படப்பிடிப்பு என்று ரஜினி மற்றும் அஜித் எடுத்த முடிவை தற்போது சூர்யாவும் பின்பற்றியுள்ளார்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரஜினியின் அண்ணாத்த’, அஜித் நடித்து வரும் ’வலிமை’ உள்பட பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு கரோனா வைரஸ் நோயாளி கூட இல்லை என்ற நிலை வந்த பின்னரே ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் தான் கலந்துகொள்ள இருப்பதாக ரஜினியும், இதே முடிவை அஜித்தும் எடுத்துள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது சூர்யாவும் தன்னுடைய அடுத்த திரைப்படமான ’அருவா’ படத்தின் படப்பிடிப்பை அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. படக்குழுவினர்களின் பாதுகாப்பை முன்னிட்டே சூர்யா இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. எனவே அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் தான் ’அருவா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சந்தானம் பிறந்த நாளிளில் சபாபதி போஸ்டர் வெளியீடு
வியாழன் 21, ஜனவரி 2021 12:05:48 PM (IST)

கரோனாவில் இருந்து மீண்ட நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்
வியாழன் 21, ஜனவரி 2021 8:55:50 AM (IST)

பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு சென்டை மேளம் முழங்க உற்சாக உற்சாக வரவேற்பு
செவ்வாய் 19, ஜனவரி 2021 3:39:48 PM (IST)

பிக் பாஸ் பட்டம் வென்ற ஆரிக்கு பாராட்டுக்கள் குவிகிறது!
திங்கள் 18, ஜனவரி 2021 4:11:56 PM (IST)

தியேட்டர்களில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
புதன் 13, ஜனவரி 2021 12:06:24 PM (IST)

இணையத்தில் லீக்கானது மாஸ்டர் பட காட்சிகள்.. படக்குழு அதிர்ச்சி..!!
செவ்வாய் 12, ஜனவரி 2021 12:03:41 PM (IST)

ராஜாJun 27, 2020 - 03:41:38 PM | Posted IP 162.1*****