» சினிமா » செய்திகள்

ரஷ்ய மொழியில் பாகுபலி 2 திரைப்படம்: தூதரகம் தகவல்

சனி 30, மே 2020 12:42:37 PM (IST)பாகுபலி 2 திரைப்படம் ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு டிவியில் ஒளிபரப்பப்பட உள்ளதாக இந்தியாவுக்கான ரஷ்யத் தூதரகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் பாகுபலி. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்துக்குப் பிறகு பிரபாஸின் மார்க்கெட் இந்திய அளவில் உயர்ந்தது. இப்படம் இந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்றது. முதல் பாகம் ரூ.685 கோடியும், இரண்டாம் பாகம் ரூ.1,810 கோடியும் உலகம் முழுவதும் வசூலித்து சாதனை புரிந்தன.

இந்நிலையில் இப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை ரஷ்ய தொலைக்காட்சி சேனல் ஒன்று கைப்பற்றியிருந்தது. அதற்காக பாகுபலி 2 திரைப்படம் ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டது. இதை இந்தியாவுக்கான ரஷ்யத் தூதரகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து ரஷ்யத் தூதரகம் ரஷ்யாவில் இந்தியப் படங்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. பாகுபலி 2 திரைப்படம் ரஷ்ய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரஷ்யத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது என்று பதிவிட்டுள்ளது. அதோடு பாகுபலி படத்தின் காட்சியையும் இணைத்துள்ளது. பாகுபலி 2 திரைப்படம் ரஷ்யத் தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory