» சினிமா » செய்திகள்

பா. இரஞ்சித் படத்தில் நாயகனாக நடிக்கும் யோகி பாபு

புதன் 27, மே 2020 4:35:37 PM (IST)

பிரபல இயக்குநர் பா. இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் யோகி பாபு.

பா. இரஞ்சித், ஆர்யா நடிக்கும் படத்தை அடுத்ததாக இயக்கவுள்ளார். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய இரு படங்களை பா. இரஞ்சித் தயாரித்துள்ளார். இந்நி்லையில், கோல்டன் ரேசியோ ஃபிலிம்ஸ் மற்றும் ரெட் கார் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 5 படங்களை பா. இரஞ்சித்தின் நீலம் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 

லெனின் பாரதி, மாரி செல்வராஜ், அகிரன் மோசஸ், பிராங்கிளின் ஜகோப், சுரேஷ் மணி ஆகியோர் இந்த ஐந்து படங்களையும் தயாரிக்கவுள்ளார்கள். இவர்களில் எந்த இயக்குநர் யோகி பாபு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என இன்னும் தெரிவிக்கப்படவில்லை. யோகி பாபு தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். பா. இரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory