» சினிமா » செய்திகள்

ஆஸ்கார் விருது பெற்ற கொரிய படம் விஜய் படத்தின் காப்பியா? கே.எஸ்.ரவிகுமார் விளக்கம்

வியாழன் 13, பிப்ரவரி 2020 5:36:16 PM (IST)

ஆஸ்கார் விருது பெற்ற கொரிய படம் விஜய் நடித்துள்ள மின்சார கண்ணா படத்தின் காப்பி போல் உள்ளதாக ரசிகர்கள் கிண்டல் செய்துவருகின்றனர். 

சர்வதேச அளவில் வழங்கப்படும் உயரிய ஆஸ்கார் விருதை கொரிய படமான பாராசைட் தட்டி சென்றுள்ளது. ஆஸ்கார் வரலாற்றில் ஆங்கிலம் அல்லாத பிறமொழி படம் சிறந்த படத்துக்கான விருதை பெற்று இருப்பது இதுவே முதல் முறையாகும். ஏழை குடும்பத்தை சேர்ந்த இளைஞன் பணக்கார வீட்டில் வேலைக்கு சேர்கிறான். பின்னர் அந்த குடும்பத்தினரை ஏமாற்றி தனது தாய், தந்தை, தங்கையை அங்கு வேலைக்கு சேர்த்து தில்லுமுல்லு செய்வதுபோன்ற கதைக்களத்தில் இந்த படம் தயாராகி உள்ளது. ஆஸ்கார் விருதை வென்ற பாராசைட் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.

இந்நிலையில் பாராசைட் படம் விஜய் நடித்த மின்சார கண்ணா படத்தின் காப்பி என்று சமூக வலைத் தளத்தில் தகவல் பரவி வருகிறது. 1999-ல் வெளியான மின்சார கண்ணா படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருந்தார். ரம்பா, குஷ்பு, மோனிகா கோஸ்டலினோ ஆகியோரும் நடித்து இருந்தனர். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. பாராசைட், மின்சார கண்ணா ஆகிய 2 படங்களின் கதைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதாக விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் சமூக வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சிலர் மின்சார கண்ணாவின் காப்பி படத்துக்கு ஆஸ்கார் விருது வழங்கி இருப்பதாக கேலி பதிவுகளையும் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், இதுபற்றி மின்சார கண்ணா படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிகுமாரிடம் கேட்டபோது, நான் இன்னும் பாரசைட் படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் ரசிகர்கள் சொல்வதைப் பார்க்கும்போது, எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் 20 வருடத்துக்கு முன்பே, ஆஸ்கர் விருதுக்குத் தகுதியான கதையை நான் தேர்வு செய்திருக்கிறேன். நடிகர் விஜய் இந்தப் படத்தை அதிகம் விரும்பினார். ஆஸ்கர் விருது பெற்ற பாரசைட் குழுவை வாழ்த்துகிறேன் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகை பரவை முனியம்மா காலமானார்

திங்கள் 30, மார்ச் 2020 8:37:05 AM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory