» சினிமா » செய்திகள்

மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவு : நன்றி நெய்வேலி என செல்பி பதிவிட்ட நடிகர் விஜய்

திங்கள் 10, பிப்ரவரி 2020 8:35:09 PM (IST)நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, ரசிகர்களுடன் எடுத்த செல்ஃபி போட்டோவை பதிவிட்டு நன்றி நெய்வேலி என நடிகர் விஜய் 

பிகில் திரைப்பட வசூலில் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் நடிகர் விஜய் வீட்டில் இரு தினங்களுக்கு முன்னர் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 23 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையின் முடிவில் விஜய் இடமிருந்து எந்த ரொக்கமும், ஆவணங்களும் கைப்பற்றவில்லை என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. 

அதன் பின்னர் படப்பிடிப்பு முடிந்து செல்லும் போதெல்லாம் தனது ரசிகர்களை விஜய் சந்தித்து வருகிறார். மூன்றாவது நாளான நேற்று வேனின் மீது ஏறி நின்று தனது ரசிகர்களை பார்த்து கையசைத்த அவர், தனது செல்போனை எடுத்து செல்ஃபி எடுத்துகொண்டார். இந்நிலையில், நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, ரசிகர்களுடன் எடுத்த செல்ஃபி போட்டோவை பதிவிட்டு நன்றி நெய்வேலி என நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory