» சினிமா » செய்திகள்

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் 1 கோடி ரூபாய் பரிசு: ஜாக்கிசான் அறிவிப்பு

திங்கள் 10, பிப்ரவரி 2020 5:45:23 PM (IST)

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு அளிப்பேன் என்று ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் அறிவித்துள்ளார்.

சீனாவில் வுகான் நகரத்தில் உருவான கொரோனா வைரஸ் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த கொடூர கொரோனா வைரசால் இதுவரை 908 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலக அளவில் 37000-க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. 

வைரஸ் பரவாமல் தடுக்க சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவசர அவசரமாக 1000 படுக்கையறைகளுடன் இரண்டு தற்காலிக மருத்துவமனைகளையும் உருவாக்கி உள்ளது. இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஜாக்கிசான் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- இந்த கொடூர வைரசை தோற்கடிக்க விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முக்கியம். என்னைப் போன்று பலரும் இதனை நம்புகின்றனர். அதனால் வைரசை கட்டுப்படுத்த விரைவில் ஒருமாற்று மருந்தை உருவாக்க முடியும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

இவ்வாறு தனி நபரோ அல்லது ஒரு அமைப்போ கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் அவர்களுக்கு ஒரு மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய்) அளிப்பேன். இந்த அறிவிப்பு பணத்தை பொருட்டாக கொண்டதல்ல. எனது நண்பர்கள் வைரசால் பாதிக்கப்பட்டு போராடுவதை பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் நன்றாக வாழ வேண்டும் அதற்காகத்தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory