» சினிமா » செய்திகள்

"ஹிந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை" - அமித்ஷா கருத்திற்கு காயத்ரி ரகுராம் ஆதரவு

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 4:51:54 PM (IST)

ஹிந்தி மொழி குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா கூறிய கருத்து தவறில்லை என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

ஹிந்தி தினத்தையொட்டி பாரதீய ஜனதா தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், சர்வதேச அளவில் ஹிந்தியாவை அடையாளப்படுத்த நாடு முழுவதற்கும் ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். ஹிந்தி மொழியால்தான் ஹிந்தியாவை இணைக்க முடியும் என்றும் அதில் அவர் கூறி உள்ளார். அமித்ஷாவின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அவரது கருத்து நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் என்று கூறி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில்,  ஹிந்தி மொழி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து தவறில்லை என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தாய்மொழிக்கும் தேசிய மொழிக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், ஹிந்தியாவின் பல மாநிலங்களில் ஹிந்தி பொது மொழியாக பேசப்பட்டு வருவதால் ஹிந்திய மக்கள் இணைவதற்கு ஹிந்தி வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். பள்ளி செல்ல அடம் பிடிக்கும் குழந்தைகளை கட்டாயப்படுத்துவது போல் எதிர்காலத்திற்கு நல்லது என்பதால் ஹிந்தியை கட்டாயப்படுத்துவது தவறில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory