» சினிமா » செய்திகள்

திரைப்பட இயக்குநர் - நடிகர் ராஜசேகர் காலமானார்

திங்கள் 9, செப்டம்பர் 2019 4:52:27 PM (IST)

திரைப்பட இயக்குநரும், நடிகருமான ராஜசேகர் (59) உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். 

பாரதிராஜாவின் "நிழல்கள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர்,  கவிஞர் வைரமுத்து எழுதிய முதல் பாடலான "இது ஒரு பொன்மாலைப் பொழுது பாடலில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டிய இவர்,  இயக்குநர் ராபர்ட்டுடன் இணைந்து "பாலைவன ரோஜாக்கள்,  "சின்னப் பூவே மெல்லப் பேசு , "பறவைகள் பலவிதம்  உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

ராபர்ட் - ராஜசேகர் என இருவரும் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இரட்டை இயக்குநர்கள் வரிசையில் இவர்கள் இடம் பிடித்தனர்.  பின்னர் சினிமா, சின்னத்திரை இரண்டிலும் நடித்து வந்தார். கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  ராஜசேகருக்கு  மனைவி நூரிவி உள்ளார். பொதுமக்களின் அஞ்சலிக்குப் பின் ராஜசேகரின் உடல் கே. கே. நகரில் உள்ள மயானத்தில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிகில் படத்தின் 3வது பாடல் வெளியீடு

புதன் 18, செப்டம்பர் 2019 6:43:25 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory