» சினிமா » செய்திகள்

பிக்பாஸ் மதுமிதா தற்கொலை மிரட்டல்? : விஜய் டிவி நிர்வாகம் காவல்துறையிடம் புகார்

புதன் 21, ஆகஸ்ட் 2019 8:03:50 PM (IST)பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நடிகை மதுமிதா, தற்கொலை மிரட்டல் விடுப்பதாக விஜய் டிவி நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்த காரணத்துக்காகக் கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் நடிகை மதுமிதா. நடிகை ஷெரின் மற்றும் இதர போட்டியாளர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக தன் கையைத் தானே அறுத்துக்கொண்டார் மதுமிதா. இதனால் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நடிகை மதுமிதா, தற்கொலை மிரட்டல் விடுப்பதாக விஜய் டிவி நிர்வாகம் சென்னை - கிண்டி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. விஜய் டிவி நிறுவனத்தின் சட்டத்துறை மேலாளர் பிரசாத் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக மதுமிதா ரூ. 11 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார். 

பிறகு, ஒரு நாளைக்கு ரூ. 80,000 வீதம் மீதமுள்ள 42 நாள்களுக்கான பணத்தைத் திருப்பித் தருவதாகவும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனாவுக்கு அளித்த குறுஞ்செய்தியில், பணத்தை இரு நாள்களில் தராவிட்டால் தற்கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார் என அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஏற்கனவே பல சர்ச்சைகள் இருக்க இது புதிய பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory