» சினிமா » செய்திகள்

ரஜினி - கமல் படங்களுக்கு இசை: அனிருத் பெருமிதம்

திங்கள் 19, ஆகஸ்ட் 2019 12:10:18 PM (IST)

ஒரே சமயத்தில் ரஜினி சார் - கமல் சார் படங்களுக்கு இசையமைப்பது பெருமையாக உள்ளதாக அனிருத் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

தமிழில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தமிழில் தர்பார், இந்தியன் 2, தளபதி 64 ஆகிய படங்களுக்கும், தெலுங்கில் கேங் லீடர் படத்துக்கும் இசையமைத்து வருகிறார். நேற்று (ஆகஸ்ட் 18) சென்னையில் தனியார் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டார் அனிருத். அப்போது பலரும் தர்பார் படம் தொடர்பாகக் கேள்வி எழுப்பினர். இந்த விழாவில் அனிருத் பேசும் போது, "தமிழில் எனது அடுத்த இசை ஆல்பமாக தர்பார் வெளியாகும். நவம்பர் அல்லது டிசம்பரில் இசை வெளியீடு இருக்கும். படத்தின் பாடல் பணிகள் முடிந்துவிட்டன. நன்றாக வந்திருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் சார் அதைத் தலைவர் படமாக இயக்கிக் கொண்டிருக்கிறார். பேட்ட படத்துக்குப் பிறகு வெளியாகவுள்ளதால் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு பணிபுரிந்து கொண்டிருக்கிறோம். இந்தியன் 2 படத்திலும் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். ஒரே சமயத்தில் ரஜினி சார் - கமல் சார் படத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பதை நம்ப முடியவில்லை. யோசித்துப் பார்க்க முடியாத ஒரு விஷயமாக இருக்கிறது. பெருமையாக உணர்கிறேன். இவ்விரண்டுக்கும் பிறகு அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். ஒவ்வொரு முறை எனது ஆல்பம் வெளியாகும் போது, எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது" என்று பேசினார் அனிருத்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory