» சினிமா » செய்திகள்

கதாசிரியர் கலைஞானத்துக்கு பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா: ரஜினி பங்கேற்கிறார்!!

வெள்ளி 9, ஆகஸ்ட் 2019 3:37:45 PM (IST)

தமிழ்த் திரையுலகில் பிரபலமான கதாசிரியர் கலைஞானத்துக்கு, பாரதிராஜா தலைமையில் நடைபெற உள்ள பாராட்டு விழாவில் ரஜினி பங்கேற்கவுள்ளார்.

1980 -90களில் தமிழ்த் திரையுலகில் பல படங்களில் பணியாற்றியவர் கலைஞானம். கதாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், வசனகர்த்தா மற்றும் தயாரிப்பாளர் என இவருக்கு பன்முகத்திறமைகள் உண்டு. இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட பல இயக்குநர்களுக்கு நெருங்கிய நண்பராகவும் வலம் வந்தவர். எழுத்தாளர் பாலகுமாரன் இயக்கத்தில் உருவான இது நம்ம ஆளு படத்தில் பாக்யராஜ், இவரை ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் பாக்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

கலைஞானம் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதற்காக பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா ஒன்று நடைபெறவுள்ளது. இதில் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கவுள்ளனர். ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கலைஞானத்தைப் பெருமைப்படுத்தவுள்ளார். ஆகஸ்ட் 14-ம் தேதி கலைவாணர் அரங்கில் இந்த விழா நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காகவே தர்பார் படப்பிடிப்பிலிருந்து சென்னை திரும்பியுள்ளார் ரஜினி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory