» சினிமா » செய்திகள்

இந்தியன் 2 படப்பிடிப்பு ஆக.12 முதல் மீண்டும் தொடக்கம்

புதன் 7, ஆகஸ்ட் 2019 3:32:17 PM (IST)

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு வரும் 12-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 2021-ல் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

மீண்டும் கமல் - ஷங்கர் இணைப்பில் தொடங்கப்பட்ட படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரிக்க, படப்பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கினார்கள். ஆனால், சில நாட்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படத்தின் பட்ஜெட், கமலுக்கான மேக்கப் உள்ளிட்ட பல சிக்கல்கள் எழுந்தன. இதனால் மீண்டும் எப்போது படப்பிடிப்பு என்பதே தெரியாமல் இருந்தது.

லைகா நிறுவனம் சுபாஷ்கரன் சென்னை வந்த போது, இயக்குநர் ஷங்கர் அவரைச் சந்தித்து பேசினார் . இதில் சுமுக முடிவு எட்டப்பட்டது. இதில் 200 கோடி பொருட்செலவு என்பது உறுதிச் செய்யப்பட்டது. இதனால் மீண்டும் இந்தியன் 2 பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் கமலுடன் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்கவுள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார். ஆனால் படத்தின் தாமதத்தால் தற்போது அதிலிருந்து விலகிவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.

தற்போது வரும் 12-ம் தேதிமுதல் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைக்கு ஏப்ரல் 2021-ல் வெளியிடலாம் என முடிவு செய்துள்ளனர்.இந்தியன் 2 படத்துக்காக அனைத்து நடிகர்களிடமும் பெருவாரியான தேதிகளை வாங்கியுள்ளது படக்குழு. அதைப் போல் இந்தப் படத்தில் கவனம் செலுத்திக் கொண்டே, தனது தலைவன் இருக்கின்றான் படத்திலும் நடித்து, இயக்க முடிவு செய்துள்ளார் கமல்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory