» சினிமா » செய்திகள்

அமலாவுக்கு பதிலாக மேகா: விஜய் சேதுபதிக்கு ஜோடி!!

செவ்வாய் 25, ஜூன் 2019 5:33:11 PM (IST)

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் அமலா பால் நடித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக மேகா ஆகாஷ் இணைந்துள்ளார்.

எஸ்.பி.ஜனநாதனிடம் துணை இயக்குநராக பணியாற்றிய ரோகாந்த் விஜய் சேதுபதியின் 33ஆவது படத்தை இயக்கிவருகிறார். அமலா பால் கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் மகிழ் திருமேனி வில்லனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. சர்வதேசப் பிரச்சினை ஒன்றை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படம் மியூசிக்கல் ரொமான்ஸ் பாணியில் தயாராகிறது. இசக்கி துரை சொந்தமாக தயாரிக்கும் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றுள்ளது.

தற்போது கால்ஷீட் பிரச்சினை காரணமாக அமலா பால் படக்குழுவிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக வந்தா ராஜாவாதான் வருவேன், பேட்ட ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்ற மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது ஊட்டியில் நடைபெறும் படப்பிடிப்பில் இவர் இணைந்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்கிறார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory