» சினிமா » செய்திகள்

நடிகர் சங்கத்தில் நான் உறுப்பினர் இல்லை: சரத்குமார்

வெள்ளி 14, ஜூன் 2019 5:08:46 PM (IST)

நடிகர் சங்கத்தில் நான் உறுப்பினர் கிடையாது என்பதால் ஆதரவு குறித்து கருத்து கூற முடியாது  என நடிகர் சரத்குமார் கூறி உள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  சமத்துவ மக்கள் கட்சி  தலைவர் சரத்குமார் கூறியதாவது: நடிகர் சங்கத்தில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே தனது கருத்து. எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது குறித்து வேதனை அளிக்கிறது.

நடிகர் சங்கத்தில் நான் உறுப்பினர் கிடையாது என்பதால் ஆதரவு குறித்து கருத்து கூற முடியாது. ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தொடர்ந்து நடைமுறைபடுத்தி இருந்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்காது. தண்ணீர் பிரச்சினையைப் பொருத்தவரை எதிர்க்கட்சி, ஆளும் கட்சி இருவரும் இணைந்து எதிர்கொள்ள வேண்டியது அவசியம் என கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory