» சினிமா » செய்திகள்

ஆகஸ்ட் வரை தர்பார் ஷூட்டிங்: ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்

வெள்ளி 14, ஜூன் 2019 4:46:15 PM (IST)

ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார். 

‘பேட்ட’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், நிவேதா தாமஸ், பிரதீக் பாபார், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, ஹரிஷ் உத்தமன், ஆனந்தராஜ், சுமன், ஸ்ரீமன் உள்பட மேலும் பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினிகாந்த் மும்பை தாதாக்களை அழிக்கும் போலீஸ் அதிகாரியாக வருகிறார். படப்பிடிப்பு காட்சிகள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. 

இதனை தடுக்க படப்பிடிப்பு தளத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் தர்பார் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் இன்னும் 2 வாரத்தில் வசன காட்சிகளின் படப்பிடிப்பு முடிய இருப்பதாகவும் தகவல் வெளியானது. ரசிகர்களும் நம்பினர். இதனை ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்டரில் மறுத்துள்ளார். ஆகஸ்டு மாதம் வரை தர்பார் படப்பிடிப்பு நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் ஒரு பாடல் காட்சிக்காக ரஜினிகாந்தும், நயன்தாராவும் சுவிட்சர்லாந்து செல்ல இருக்கிறார்கள். தர்பார் படம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.


மக்கள் கருத்து

இவன்Jun 23, 2019 - 07:32:19 AM | Posted IP 108.1*****

அந்த கூத்தாடி குஜினி அரசியலில் வந்தால் மக்களை சந்திக்க நேரம் இருக்காது .. காசுக்காக சினிமாவில் அடிமையாக இருக்க நேரம் இருக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory