» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கராத்தே போட்டியில் ஏரல் மாணவர்கள் வெற்றி!

வியாழன் 8, டிசம்பர் 2022 11:59:34 AM (IST)சென்னையில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஏரல் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

சென்னையில் ஷிடோ ரியூ நிப்பான் கராத்தே தோ காய் இந்தியா சார்பில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் கட்டா, சண்டை பிரிவில் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் கராத்தே பயிலும் தியா, மணிகண்டன், நவீன் குமார், சூர்ய நாகாராஜ், கிழியா முத்து ஆகியோர் பரிசுகள் பெற்று சாதனை புரிந்துள்ளார். வெற்றி பெற்ற மாணவர்களையும், தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன், பயிற்சியாளர் சண்முக நாராயணன் ஆகியோரை முப்பிடாதி அம்மன் கோவில் தலைவர், இளைஞர் அணி, மற்றும் கோவில் நிர்வாக கமிட்டியின் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory