» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணி கேப்டனாக ஷிகர் தவான் நியமனம்!
திங்கள் 3, அக்டோபர் 2022 12:28:24 PM (IST)
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி: ஷிகர் தவான் (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், கில், ரஜத் படிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், அவேஷ் கான், முகமட் சிராஜ், தீபக் சாஹர்.
டி20 உலக கோப்பை இந்த மாதம் தொடங்க உள்ளதால் அந்த அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் முடிவடைந்த உடன் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதால் ஒருநாள் தொடரில் அவர்கள் இடம் பெறவில்லை.
முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 6ஆம் தேதியும், மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகள் அக்டோபர் 9 மற்றும் 11ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.முகேஷ் குமார் மற்றும் ரஜத் படிதார் ஆகியோர் இந்திய அணிக்கு அறிமுகமாக தேர்வு பெற்றுள்ளனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 போட்டியில் சதம்: ருதுராஜ் கெய்க்வாட் சாதனை!
புதன் 29, நவம்பர் 2023 12:12:34 PM (IST)

டேவிஸ் கோப்பை ஆடவா் டென்னிஸ்: இத்தாலி 2-ஆவது முறையாக சாம்பியன்
செவ்வாய் 28, நவம்பர் 2023 10:52:29 AM (IST)

ஆடவா் ஹாக்கி: தமிழ்நாடு, செயில், ஒடிசா, ஹூப்ளி அணிகள் வெற்றி
செவ்வாய் 28, நவம்பர் 2023 8:13:03 AM (IST)

ரிங்கு சிங் பேட்டிங் தோனி போல் உள்ளது: கேப்டன் சூர்யகுமார் பாராட்டு
திங்கள் 27, நவம்பர் 2023 5:05:14 PM (IST)
_1701084731.jpg)
சிஎஸ்கே கேப்டனாக தோனி நீட்டிப்பு: விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்!
திங்கள் 27, நவம்பர் 2023 5:02:13 PM (IST)

மும்பை அணிக்கு மாறினார் ஹாா்திக் பாண்டியா: குஜராத் கேப்டனாக கில் நியமனம்!
திங்கள் 27, நவம்பர் 2023 4:04:32 PM (IST)
