» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 போட்டிகளில் 732 ரன்கள் குவிப்பு: தரவரிசையில் 2-ம் இடத்துக்கு முன்னேறினார் சூர்யகுமார் யாதவ்!

வியாழன் 29, செப்டம்பர் 2022 12:40:06 PM (IST)இந்த ஆண்டு டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ள இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தரவரிசையில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ், டி20 கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். இந்த வருடம் 21 ஆட்டங்களில் 1 சதம், 5 அரை சதங்களுடன் 732 ரன்கள் எடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். ஸ்டிரைக் ரேட் - 180.29. மேலும் இந்த வருடம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் அவர் உள்ளார். 

இதையடுத்து சமீபத்தில் வெளியிடப்பட்ட டி20 தரவரிசையில் 2-ம் இடத்துக்கு சூர்யகுமார் யாதவ் முன்னேறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடி வரும் பாகிஸ்தானின் ரிஸ்வான் முதலிடத்திலும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் 3-வது இடத்திலும் உள்ளார்கள்.  பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் அக்‌ஷர் படேல், 18-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory