» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 ஆயிரம் ரன்ககள்: ஸ்மிருதி மந்தனா சாதனை

வியாழன் 22, செப்டம்பர் 2022 10:39:53 AM (IST)



சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்து இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு இரண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் இந்த சாதனையைப் படைத்திருந்தார். அவர் 88 போட்டிகளில் 3 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை எட்டினார். ஆனால் ஸ்மிருதி மந்தனா 76 போட்டிகளில் இந்த இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளார். இதனால் மகளிர் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை எட்டிய வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி பெற்றார். 

ஒட்டுமொத்தமாக ஒப்பிடும்போது ஷிகர் தவான், விராட் கோலிக்கு பிறகு ஸ்மிருதி மந்தனா இடம் பெற்றுள்ளார். ஷிகர் தவான் 72 போட்டிகளிலும், விராட் கோலி 75 போட்டிகளிலும் 3 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை எட்டினர்.  ஒட்டுமொத்த மகளிர் கிரிக்கெட்டில் 22 வீராங்கனைகள் 3 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளனர். இதில் ஸ்மிருதி மந்தனா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார். முதலிடத்தை பெலின்டா கிளார்க் (62 போட்டிகள்), இடண்டாவது இடத்தை மெக் லேன்னிங் (64 போட்டிகள்) ஆகியோர் பெற்றுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory