» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஹாங்காங் அணியை வீழ்த்திய இந்தியா வெற்றி : சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி!

வியாழன் 1, செப்டம்பர் 2022 8:43:38 AM (IST)



ஆசிய கோப்பை டி-20யில் ஹாங்காங் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. 

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில், துபாயில் நேற்று இரவு நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- ஹாங்காங் (ஏ பிரிவு) அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹாங்காங் அணியின் கேப்டன் நிஜாகத் கான் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. 

இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கினர். இந்த ஜோடியில் கேப்டன் ரோகித் சர்மா 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆயுஷ் ஷுக்லா பந்துவீச்சில் ஐசஸ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த கே.எல் ராகுல் 39 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இதன்பிறகு களத்தில் இருந்த விராட் கோலியுடன் சூர்யகுமார் ஜோடி சேர்ந்தார். ரன்குவிப்பில் அதிரடி காட்டி வந்த இந்த ஜோடியில் விராட் கோலி 40 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவரை தொடர்ந்து சூர்யகுமார் 22 பந்துகளில் அரைசதம் விளாசி மிரட்டினார். அதோடு, ஆட்டத்தின் கடைசி ஓவரில் 4 சிக்சர்கள் அடித்து சிக்சர் மழை பொழிந்தார் சூர்யகுமார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. 44 பந்துகள் 3 சிக்ஸர் ஒரு பவுண்டரியை விரட்டிய கோலி 59 ரன்களும், 26 பந்துகளில் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகளை சிதறவிட்ட சூர்யகுமார் யாதவ் 68 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து ஹாங்காங் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக நிஷ்கத் கான் மற்றும் யஷிம் முர்டசா களமிறங்கினர். யஷிம் முர்டசா 9 ரன்களில் அர்ஷ்தீப் பந்தில் அவுட் ஆனார். நிஷ்கத் கான் 10 ரன்களில் ஜடேஜாவால் ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்து களமிறங்கிய ஹயத் மற்றும் கின்சித் ஷா இருவரும் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ஹயத் 35 பந்துகளில் 41 ரன் அடித்து ரவீந்திர ஜடேஜா பந்தில் அவுட் ஆனார். அய்சஸ் கான் 14 ரன்களில் போல்டானார்.

சிறிது நேரம் தாக்குபிடித்து ஆடிய கின்சித் ஷா 30 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய அலி மற்றும் மெக்கன்சி அணியை வெற்றி பெற செய்ய கடினமாக போராடினர். இருப்பினும் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் ஹாங்காங் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனையடுத்து ஹாங்காங் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்து சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர், ஜடேஜா, அர்ஷ்தீப், அவேஷ் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.


மக்கள் கருத்து

கூமுட்டை கிரிக்கெட் பயித்தியங்களுக்குSep 5, 2022 - 01:30:36 PM | Posted IP 162.1*****

இந்தியா சிறப்பாக விளையாடியதால் பெட்ரோல் விலை லிட்டர் கு 50 கிடைக்க வாய்ப்பு

TN 72 AL 2029Sep 1, 2022 - 02:16:16 PM | Posted IP 157.4*****

Virat .....come back again.......reason behind....மனைவி வழி உறவினர்களால் தடைப்பட்ட விளையாட்டு தற்போது சரி செய்யப்பட்டுள்ளது....நம்பமுடியலையா? விளம்பர பட call sheet மற்றும் விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சி ஆட்ட தேதி இரண்டும் ஒரே சமயத்தில் booking செய்த mrs.virat தற்போது தனது தவறை உணர்ந்துள்ளார்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory