» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

திங்கள் 29, ஆகஸ்ட் 2022 8:29:39 AM (IST)



ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட்டில் துபாயில் நேற்று இரவு நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 19.4 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக பேட்டிங் செய்தது மட்டுமின்றி, 3 விக்கெட்டுகளை வீத்திய ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்நிலையில், பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள், பல்வேறு நாட்டு கிரிக்கெட் வீரர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory