» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

காமன்வெல்த் மல்யுத்தத்தில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் உள்பட 6 பதக்கம்

சனி 6, ஆகஸ்ட் 2022 4:54:50 PM (IST)



காமன்வெல்த் போட்டிகளில் நேற்று ஒரே நாளில் மல்யுத்தத்தல் 3 தங்கம் ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 6 பதக்கத்தை வென்றது. 

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. மல்யுத்தத்தில் ஆடவர் ப்ரீஸ்டைல் 86 கிலோ பிரிவில் தீபக் புனியா 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானின் முஹம்மது இனாமைத்தை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார். மகளிர் 62 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனையான 29வயது சாக் ஷி மாலிக் காலிறுதியில் இங்கிலாந்தின் கெல்சி பார்ன்ஸை 10-0 என்ற கணக்கிலும், அரையிறுதியில் கேமரூனின் பெர்தே எமிலியென் எடேன் என்கோல்லை 10-0 எனவும் தோற்கடித்தார்.

இறுதி போட்டியில், கனடாவின் கோடிநெஸ்சை எதிர்கொண்டார். ஒருகட்டத்தில் 0-4 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கி இருந்த சாக்‌ஷி மாலி அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டும் வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றினார். இதேபோல் ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் பஜ்ரங் பூனியாகனடாவின் லாச்லன் மெக்நீல்சுடன் மோதினார். இதில் ஆதிக்கம் செலுத்திய பஜ்ரங் பூனியா 9-2 என்ற புள்ளி கணக்கில் எளிதாக வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தக்க வைத்துக்கொண்டார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான 28 வயதான பஜ்ரங் பூனியா அரியானாவைச் சேர்ந்தவர் ஆவார்.

மகளிர் 57 கிலோ எடைபிரிவு மல்யுத்த இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் 3-7 என்ற கணக்கில் 2 முறை சாம்பியனான நைஜீரியாவின் ஒடுனயோ போலாசட்விடம் தோல்வி அடைந்தார். இதனால் அன்ஷூ மாலிக்கிற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. மகளிர் 68 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரான் வெண்கலப் பதக்கம் வென்றார். கக்ரான் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் டோங்காவைச் சேர்ந்த டைகர் லில்லி காக்கர் லெமாலியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தார். ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​125 கிலோ பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் மோஹித் கிரேவால் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஜமைக்காவைச் சேர்ந்த ஆரோன் ஜான்சனை எதிர்கொள்ள கிரேவால் 5-0 என்ற கணக்கில் தோற்கடித்தார். 3 நிமிடம் 30 வினாடிகளில் க்ரேவால் பதக்கத்தை கைப்பற்றினார். இந்தியா இதுவரை 9 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என்று 26 பதக்கங்களுடன் 7வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா 50 தங்கம், 44 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 140 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. நேற்று பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory