» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 5 பதக்கங்களை குவித்த இந்தியா..!

வியாழன் 4, ஆகஸ்ட் 2022 12:33:31 PM (IST)



காமன்வெல்த் போட்டிகளில் நேற்று ஒரே நாளில் 5 பதக்கங்களை  குவித்த இந்தியா. பதக்கப் பட்டியலில் 7-ம் இடத்தில் நீடிக்கிறது.

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இதில் இந்தியா நேற்று 1 வெள்ளி , 4 வெண்கலம் வென்றது. ஜூடோ போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் துலிகா மான் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆண்களுக்கான பளுதூக்குதலின் (109 கிலோ) இறுதி போட்டியில் இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் இப்போட்டியில் மொத்தம் 355 கிலோ தூக்கி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார். ஸ்குவாஷ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோசல், வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

ஆண்களுக்கான ( 109+ கிலோ) பளுதூக்குதலில் இறுதி போட்டியில் இந்திய வீரர் குர்தீப் சிங் பங்கேற்றார். அவர் இந்தப் போட்டியில் 390 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் இறுதி போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 2.22 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தை கைபற்றினார்.நேற்று 1 வெள்ளி , 4 வெண்கலம் வென்றது.காமன்வெல்த் போட்டி பதக்கப் பட்டியலில் இந்தியா 18 பதக்கங்களுடன் 7-ம் இடத்தில் நீடிக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory