» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் பதிலடி: மெக்காய் வேகத்தில் சரிந்த இந்தியா!

செவ்வாய் 2, ஆகஸ்ட் 2022 10:37:26 AM (IST)



வெஸ்ட் இன்ன்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 2வது t20 போட்டி செயின்ட் கிட்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வீரர்களின் பேட் மற்றும் மற்ற உபகரணங்கள் மைதானத்திற்கு வரவில்லை . இதனால் போட்டி மூன்று மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது. இதில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை வெஸ்ட் இண்டீஸ் அணி தேர்வு செய்தது.

தொடக்க வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா ஆட்டத்தின் முதல் பந்தியிலே ஆட்டம் இழந்தார். இதனால் இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கம் ஆக அமைந்தது. மற்றொரு தொடக்க வீரராக களம் இறங்கிய சூரிய குமார் யாதவும் 11 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்ரேயாஸ் ஐயர் 10 ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 12 பந்துகளை எதிர் கொண்டு இரண்டு சிக்ஸர்கள் ஒரு பவுண்டரிகள் விளாசி 24 ரன்கள் எடுத்தார். இந்திய அணி அதிரடியாக விளையாட முற்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 

குறிப்பாக பவர் ப்ளேவில் 56 ரன்களை விளாசி இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை பறி கொடுத்தது. இதன்பிறகு நடுவரிசையில் ஹர்திக் பாண்டியா தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய பிறகு பொறுமை காத்து 31 ரன்கள் அடித்தார். அவருக்கு ஜடேஜாவும் பக்க பலமாக நின்று 30 பந்துகளுக்கு 27 ரன்கள் சேர்த்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 7 ரன்களில் வெளியேற தமிழக வீரர் அஸ்வின் 10 ரன்கள் அடித்தார். இதனால் இந்திய அணி 19.4 ஓவரில் 138 ரன்கள் எடுத்தது. 

வெஸ்ட் இண்டீஸ் வீரர் மெக்காய் நான்கு ஓவர்களில் 17 ரன்களை விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார். 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தொடக்க வீரர் பிராண்டின் கிங் 52 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார். வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க இறுதியில் தேவன் தாமஸ் 19 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார். இதில் இரண்டு சிக்ஸர்களும் ஒரு பவுண்டர்களும் அடங்கும் இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது . இந்திய அணியில் புவனேஸ்வர் குமாரை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory