» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி; ரன்வீர் சிங் நடனம்: ஐபிஎல் நிறைவு விழா கோலாகலம்!

திங்கள் 30, மே 2022 10:26:31 AM (IST)



நடிகர் ரன்வீர் சிங்கின் நடனம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் கச்சேரியுடன் ஐபிஎல் நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது. 

ஐபிஎல் நிறைவு விழாவில் தொடரில் கலந்துகொண்ட 10 அணிகளை மையப்படுத்தி ரன்வீர் சிங் நடனமாடினார். இதில் சென்னை அணியை குறிக்கும் வகையில் நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடினார். இதேபோன்று ஹைதராபாத் அணிக்காக ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற 'நாட்டு கூத்து' பாடலுக்கு நடனக் கலைஞர்களுடன் நடனம் ஆடினார் ரன்வீர் சிங்.

இசை மழையில் ரசிகர்கள்: நிறைவு விழாவில் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் 75 ஆண்டுகால இந்திய கிரிக்கெட் பயணத்தை மையமாக கொண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கச்சேரி நடைபெற்றது. வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் முக்காலா முக்காபுலா, மாரோ மாரோ, ஜனகனமன ஜனங்களை நினை என பாடியபடி ஜெய் ஹோ பாடலுடன் நிறைவு செய்தார்.



அவருடன் அவரது மகன் ஏ.ஆர்.அமீன், சுவேதா, பென்னி தயாள் உள்ளிட்டோரும் பாடல்களை இணைந்து பாடினர். ஒவ்வொரு பாடலையும் ஏர்.ஆர்.ரஹ்மான் குழுவினர் பாடிய போது அவர்களுடன் இணைந்து மைதானத்தில் குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் பாடி மகிழ்ந்தனர்.

கின்னஸ் சாதனை சீருடை: 

ஐபிஎல் தொடரின் 15 ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஜெர்சியை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இது 66x42 மீட்டர் என்ற அளவில் இருந்தது. வெள்ளை நிறத்திலான இந்த ஜெர்சியில் ஐபிஎல் அணிகளின் லோகோ இடம் பெற்றிருந்தது. நேற்றைய இறுதி போட்டியின் போது இந்த ஜெர்சியின் கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory