» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரஜத் படிதார் அதிரடி சதம்: லக்னோவை வெளியேற்றியது பெங்களூரு அணி!

வியாழன் 26, மே 2022 10:29:11 AM (IST)


ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டா் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை வெளியேற்றியது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

தொடக்க வீரர்களாக டு பிளெசிஸ் - கோலி களமிறங்கினர். மொஹ்சின் கான் வீசிய பந்தில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார் டு பிளெசிஸ். அவரை தொடர்ந்து ரஜத் படிதார் களமிறங்கினார். நிதானமாக விளையாடி வந்த கோலி 24 பந்துகளில் 25 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ரஜத் படிதார் அரைசதம் கடந்து அசத்த மேக்ஸ்வெல் 9 ரன்களிலும் நடையைக்கட்டினார். அவரை தொடர்ந்து லோம்ரார் 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு ரஜத் படிதார் உடன் ஜோடி சேர்ந்தார் தினேஷ் கார்த்திக். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக ரவி பிஷ்னாய் வீசிய 16-வது ஓவரில் ரஜத் படிதார் 26 ரன்கள் குவித்தார். தொடர்ந்து அதிரடிக்காட்டிய படிதார் 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். லக்னோ அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த படித்தார் - கார்த்திக் ஜோடியை பிரிக்க முடியாமல் பந்துவீச்சாளர்கள் திணறினர். கடைசி 5 ஓவர்களில் பெங்களூரு அணி 80 ரன்களுக்கு மேல் குவித்தது. இறுதியில் 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. படித்தார் 54 பந்துகளில் 112 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் லக்னோ அணி களமிறங்கயது.

பின்னர் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 193 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. சதம் விளாசிய ரஜத் படிதார் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.  இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ராஜஸ்தானுடன் ஆமதாபாத்தில் 27-ந் தேதி நடக்கும் 2-வது தகுதி சுற்றில் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory