» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல்: புதிய வரலாறு படைத்த டி காக்- ராகுல் ஜோடி..!!

வியாழன் 19, மே 2022 5:40:37 PM (IST)விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் குவித்து ராகுல் - டி காக் ஜோடி பல சாதனைகளை படைத்துள்ளனர்.

ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது. நவி மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 66-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக கேப்டன் கே எல் ராகுல் - குயின்டன் டி காக் களமிறங்கினர். 150 ரன்கள் பாட்னர்ஷிப்பை கடந்த இந்த ஜோடி கொல்கத்தா பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். டி காக் 59 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய இந்த ஜோடி விக்கெட்டை விடாமல் அதிரடி காட்டினர்.

இறுதியில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் குவித்தது. டி காக் 70 பந்துகளில் 140 ரன்கள் அடித்தார். ராகுல் 51 பந்துகளில் 68 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 211 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.இந்த போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் அடித்ததன் மூலம் ராகுல் - டி காக் ஜோடி பல சாதனைகளை படைத்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரில் தொடக்க விக்கெட் பாட்னர்ஷிப்-க்கு அதிக ரன்கள் குவித்த ஜோடிகள் பட்டியலில் ராகுல் - டி காக் 210 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளனர்.இதற்குமுன் 2019 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் வார்னர் (ஐதராபாத் அணி ) கூட்டணி 185 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை இந்த ஜோடி முறியடித்துள்ளது.

மேலும் கொல்கத்தா அணிக்கு எதிராக எந்த விக்கெட்டுக்கும் இது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக அமைந்துள்ளது. இதற்கு முன் 2012 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸின் ரோஹித் ஷர்மா மற்றும் ஹெர்ஷல் கிப்ஸ் இரண்டாவது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் 167 ரன்கள் எடுத்து இருந்ததே கொல்கத்தா அணிக்கு எதிரான அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இருந்தது.

ஐபிஎல் தொடரின் ஒரு இன்னிங்ஸில் 20 ஓவர்களும் விளையாடிய முதல் ஜோடியும் கே.எல் ராகுல் – டி காக் கூட்டணி தான். ஆட்டமிழக்காமல் 140 ரன்கள் அடித்ததன் மூலம் டி காக் ஐபிஎல்-லில் 3-வது அதிகபட்ச ரன்னை பதிவு செய்துள்ளார். கிறிஸ் கெய்லின் 175* (2013 இல் புனே வாரியர்ஸ் இந்தியாவுக்கு எதிராக) மற்றும் பிரண்டன் மெக்கல்லத்தின் 158* (2008 இல் RCBக்கு எதிராக) ரன்களுக்கு பிறகு 3-வது இடத்தில் டி காக் உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory