» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் : சென்னை அணியை வெளியேற்றிய மும்பை அணி!!

வெள்ளி 13, மே 2022 11:31:30 AM (IST)ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பையிடம் படுதோல்வி அடைந்த சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பு பெறாமல் தொடரில் இருந்து வெளியேறுகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் 59வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணியின் தொடக்க வீரர் டேவான் கான்வே டக் அவுட் ஆகி ஆட்டமிழந்தனர். 

அதன் பிறகு மொயின் அலி டக் அவுட் ஆனார். ராபின் உத்தப்பா ஒரு ரன்னுக்கும், ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் ஆட்டமிழந்தனர். கேப்டன் தோனி மட்டும் நிலைத்து நின்று ஆடினார். மறுபுறம் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சென்னை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் சென்னை அணி 16 ஓவர்களில் 97 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக தோனி 36 ரன்கள் எடுத்தார். 

இதையடுத்து, 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் இசான் கிஷன் 6 ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரோகித் சர்மா 18 ரன்களில் ஆட்டமிழந்தார். டேனியல் சாம்ஸ் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். திலக் வர்மா 34 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். டிம் டேவிட் 16 எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார். 

மும்பை அணி 16.5 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது. இதையடுத்து மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சென்னை அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory