» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தென் ஆப்பிரிக்க தொடரில் இந்திய அணி படுதோல்வி ஏன்? பயிற்சியாளர் ராகுல் டிராவிட்விளக்கம்!
திங்கள் 24, ஜனவரி 2022 3:10:30 PM (IST)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் மோசமான தோல்வி குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 3-0 என ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்துள்ளது இந்திய அணி. இந்தத் தோல்வி குறித்து பேசியுள்ள பயிற்சியாளர் ராகுல் டிராவிட், "உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றால், நம்மிடம் சமநிலையான பிளேயிங் லெவன் இல்லை. வழக்கமாக 6, 7 மற்றும் 8-ம் இடத்தில் விளையாடும் ஆல்-ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா போன்ற வீரர்கள் காயத்தில் உள்ளனர்.
அவர்கள் மீண்டும் வரும்போது அணி இன்னும் சற்று வித்தியாசமானதாக இருக்கும். அணி சமநிலை பெறும். கேப்டன்சியை பொறுத்தவரை, கே.எல்.ராகுல் சிறப்பாகவே செயல்பட்டார். ராகுலுக்கு கேப்டனாக முதல் தொடர் இதுதான். எந்த மாதிரியான கேப்டனுக்கும் முதல் தொடர் என்பது சவால் அளிக்கக் கூடியதே. ஆனால், ராகுல் சிறப்பாகவே செயல்பட்டார் என நான் நினைக்கிறேன். கேப்டன் பதவி என்பது வீரர்களின் திறனை வெளிக்கொண்டு வருவதே ஆகும். தவறுகளை சரிசெய்து கொண்டு, வரும் காலங்களில் சிறந்த கேப்டனாக ராகுல் செயல்படுவார் என நம்புவோம்.

மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியதுதான் அணியின் கடைசி ஒருநாள் தொடர். ஆனால், 2023 உலகக் கோப்பைக்கு முன்னதாக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடினால் மட்டுமே அணியின் அடுத்தகட்ட அணுகுமுறை குறித்து யோசிக்க முடியும். உலகக் கோப்பைக்கு தயாராக காலக்கெடு வைக்க முடியாது. என்றாலும், நாட்கள் நெருங்க நெருங்க அணிக்கு தேவையானதை சரியாகச் செய்வோம் என்று நம்புகிறோம்" என்று திராவிட் விளக்கம் அளித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டியில் தேசிய ஜூனியர் ஹாக்கிப் துவக்கம் : பீகார், ஜார்க்கண்ட் அணிகள் வெற்றி!
செவ்வாய் 17, மே 2022 4:01:09 PM (IST)

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் : தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
செவ்வாய் 17, மே 2022 3:22:06 PM (IST)

கார் விபத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பலி - ஐசிசி இரங்கல்
திங்கள் 16, மே 2022 3:07:35 PM (IST)

அம்பத்தி ராயுடு ஓய்வு பெறவில்லை : சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி விளக்கம்
சனி 14, மே 2022 5:22:21 PM (IST)

ஐபிஎல் : சென்னை அணியை வெளியேற்றிய மும்பை அணி!!
வெள்ளி 13, மே 2022 11:31:30 AM (IST)

இந்திய ஹாக்கி அணியில் இடம்பெறும் இரு தமிழக வீரர்கள் : ஆளுநர் தமிழிசை வாழ்த்து
புதன் 11, மே 2022 5:35:52 PM (IST)
