» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் அக்.16ல் துவக்கம் : அக்.23ல் இந்தியா - பாக். மோதல்!

வெள்ளி 21, ஜனவரி 2022 12:20:08 PM (IST)



டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்.16ல் துவங்குகிறது. அக்.23ஆம் தேதி பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்ளவுள்ளது. 

ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், அடிலெய்டு, கீலாங், ஹோபர்ட், பெர்த் ஆகிய 7 இடங்களில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 வரை டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகளும், குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இதில், குரூப் 2 பிரிவின் முதல் ஆட்டத்தில் அக்.23ஆம் தேதி பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்ளவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.சூப்பர் 12 சுற்றில் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ள நிலையில், இலங்கை, மேற்கு வங்கம், நமீபியா, ஸ்காட்லாந்து உள்ளிட்ட அணிகள் தகுதி சுற்றில் பங்கேற்கவுள்ளன. மெல்போர்னில் நவம்பர் 13ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளன.

அக்டோபர் 16ஆம் தேதி துவங்கும் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் இலங்கை அணி, நமீபியாவை எதிர்கொள்ளவுள்ளது. இந்த தகுதி சுற்றுகளில் மேற்கிந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்துபோன்ற அணிகளும் மோதவுள்ளன. மேலும், நான்கு அணிகள் இதற்கு தகுதிபெறவில்லை. இதில் இரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நான்கு அணிகள் அடுத்து நடைபெறும் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறும்.

சூப்பர் 12:

சூப்பர் 12 சுற்றுக்கு ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள அணிகள் ஏற்கனவே தகுதிபெற்றுவிட்டன. மேலும், தகுதி சுற்றில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட நான்கு அணிகளும் இதில் பங்கேற்கும்.

சுற்று 1 தகுதிச் சுற்று (இந்திய நேரம்):

அக்டோபர் 16: இலங்கை vs நமீபியா - காலை 9:30 - கார்டினியா பார்க், ஜிலாங்

அக்டோபர் 16 - Q2 vs Q3 - பிற்பகல் 1:30 - கார்டினியா பார்க், ஜீலாங்

அக்டோபர் 17: வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்காட்லாந்து - காலை 9:30 மணி - பெல்லரிவ் ஓவல், ஹோபர்ட்

அக்டோபர் 17: Q1 vs Q4 - பிற்பகல் 1:30 - பெல்லரிவ் ஓவல், ஹோபர்ட்

அக்டோபர் 18: நமீபியா vs Q3 - காலை 9:30 - கார்டினியா பார்க், ஜீலாங்

அக்டோபர் 18: இலங்கை vs Q2 - பிற்பகல் 1:30 - கார்டினியா பார்க், ஜீலாங்

அக்டோபர் 19: ஸ்காட்லாந்து vs Q4 - காலை 9:30 - பெல்லரிவ் ஓவல், ஹோபர்ட்

அக்டோபர் 19: வெஸ்ட் இண்டீஸ் vs Q1 - பிற்பகல் 1:30 - பெல்லரிவ் ஓவல், ஹோபர்ட்

அக்டோபர் 20: இலங்கை vs Q3 - காலை 9:30 மணி - கார்டினியா பார்க், ஜீலாங்

அக்டோபர் 20: நமீபியா vs Q2 - பிற்பகல் 1:30 - கார்டினியா பார்க், ஜீலாங்

அக்டோபர் 21: வெஸ்ட் இண்டீஸ் vs Q4 - காலை 9:30 - பெல்லரிவ் ஓவல், ஹோபர்ட்

அக்டோபர் 21: ஸ்காட்லாந்து vs Q1 - பிற்பகல் 1:30 - பெல்லரிவ் ஓவல், ஹோபர்ட்

சூப்பர் 12

குழு 1 போட்டிகள்

அக்டோபர் 22: ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து: பகல் 12:30 - SCG, சிட்னி

அக்டோபர் 22: இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான் - மாலை 4:30 - பெர்த் மைதானம்

அக்டோபர் 23: A1 vs B2 - காலை 9:30 - ஓவர், ஹாபர்ட்


அக்டோபர் 25: ஆஸ்திரேலியா vs A1 - மாலை 4:30 - பெர்த் ஸ்டேடியம்

அக்டோபர் 26: இங்கிலாந்து எதிராக பி2 - காலை 9:30 மணி - எம்சிஜி, மெல்போர்ன்

அக்டோபர் 26: நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் - பிற்பகல் 1:30 - எம்சிஜி, மெல்போர்ன்

அக்டோபர் 28: ஆப்கானிஸ்தான் vs B2 - காலை 9:30 - MCG, மெல்போர்ன்

அக்டோபர் 28: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா - மதியம் 1:30 - எம்சிஜி, மெல்போர்ன்

அக்டோபர் 29: நியூசிலாந்து vs A1 - 1:30pm - SCG, சிட்னி

அக்டோபர் 31 - ஆஸ்திரேலியா vs B2 - மதியம் 1:30 - தி கபா, பிரிஸ்பேன்

நவம்பர் 1: ஆப்கானிஸ்தான் vs A1 - காலை 9:30 - தி கபா, பிரிஸ்பேன்

நவம்பர் 1: இங்கிலாந்து vs நியூசிலாந்து- பிற்பகல் 1:30 - தி கபா, பிரிஸ்பேன்

நவம்பர் 4: நியூசிலாந்து vs B2 - காலை 9:30 மணி - அடிலெய்டு ஓவல், அடிலெய்டு

நவம்பர் 4: ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் - பிற்பகல் 1:30 - அடிலெய்டு ஓவல், அடிலெய்டு

நவம்பர் 5: இங்கிலாந்து எதிராக A1 - 1:30pm - SCG, சிட்னி

குரூப் 2 போட்டிகள்:

அக்டோபர் 23 - இந்தியா vs பாகிஸ்தான் - பிற்பகல் 1:30 - எம்சிஜி, மெல்போர்ன்

அக்டோபர் 24: பங்களாதேஷ் எதிராக A2 - காலை 9:30 மணி - பெல்லரிவ் ஓவல், ஹோபர்ட்

அக்டோபர் 24: தென்னாப்பிரிக்கா vs B1 - பிற்பகல் 1:30 - பெல்லரிவ் ஓவல், ஹோபர்ட்

அக்டோபர் 27: தென்னாப்பிரிக்கா vs பங்களாதேஷ் - காலை 8:30 மணி - SCG, சிட்னி

அக்டோபர் 27: இந்தியா vs A2 - பகல் 12:30 - SCG, சிட்னி

அக்டோபர் 27: பாகிஸ்தான் எதிராக பி1 - மாலை 4:30 மணி - பெர்த் ஸ்டேடியம், பெர்த்

அக்டோபர் 30: பங்களாதேஷ் vs B1 - காலை 8:30 - தி கபா, பிரிஸ்பேன்

அக்டோபர் 30: பாகிஸ்தான் vs A2 - பகல் 12:30 - பெர்த் ஸ்டேடியம், பெர்த்

அக்டோபர் 30: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - மாலை 4:30 மணி - பெர்த் ஸ்டேடியம், பெர்த்

நவம்பர் 2: B1 vs A2 - 9:30am - அடிலெய்டு ஓவல், அடிலெய்டு

நவ. 2: இந்தியா vs பங்களாதேஷ் - மதியம் 1:30 - அடிலெய்டு ஓவல், அடிலெய்டு

நவம்பர் 3: பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா - பிற்பகல் 1:30 - எஸ்சிஜி, சிட்னி

நவம்பர் 6: தென்னாப்பிரிக்கா vs A2 - காலை 5:30 - அடிலெய்டு ஓவல், அடிலெய்டு

நவம்பர் 6: பாகிஸ்தான் vs வங்கதேசம் - காலை 9:30 மணி - அடிலெய்டு ஓவல், அடிலெய்டு

நவம்பர் 6: இந்தியா vs B1 - பகல் 1:30 - MCG, மெல்போர்ன்

நாக் அவுட்:

நவம்பர் 9: அரையிறுதி 1 - 1:30pm - SCG, சிட்னி

நவம்பர் 10: அரையிறுதி 2 - பிற்பகல் 1:30 - அடிலெய்டு ஓவல், அடிலெய்டு

நவம்பர் 13: இறுதி - மதியம் 1:30 மணி - எம்சிஜி, மெல்போர்ன்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory