» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

வியாழன் 2, டிசம்பர் 2021 11:28:56 AM (IST)



உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி காலிறுதி போட்டியில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. 

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதன் காலிறுது ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஐரோப்பாவின் மிகவும் வலுவான அணியான பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது. துவக்கத்தில் சில நிமிடங்கள் பெல்ஜியம் வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடி இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். எந்த வாய்ப்பும் கொடுக்காமல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினர். அதன்பின்னர் இந்திய வீரர்கள் சுதாரித்து ஆடினர். 21வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில், இந்திய வீரர் சர்தானந்த் திவாரி கோல் அடித்து அசத்தினார். 

அதன் பின்னர் இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. எனவே, இந்தியா 1-0 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிது. 2016ல் லக்னோவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின்போது, இறுதிப்போட்டியில் பெல்ஜியம் அணியை இந்தியா 2-1 என வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்த முறையும் பெல்ஜியம் அணியை வீழ்த்தி உள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ஜெர்மனி அணியுடன் இந்தியா மோத உள்ளது. 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி, காலிறுதியில் 3-1 என ஸ்பெயின் அணியை வென்றது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory