» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரோஹித், ராகுல் அசத்தல்: டி-20 தொடரை வென்றது இந்தியா

சனி 20, நவம்பர் 2021 8:51:43 AM (IST)

நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய 2-வது டி-20 ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்றிரவு நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மார்டின் கப்டிலும், டேரில் மிச்சேலும் களமிறங்கினர். இருவரும் இணைந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய கப்டில் 15 பந்துகளில் 2 சிக்சருடன் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். 

டேரில் மிச்சேல் நிதானமாக விளையாடி 31 ரன்கள் சேர்த்தார். ஆரம்பத்தில் அதிரடி காட்டிய நியூசிலாந்து அணியானது அதிக ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய பந்துவீச்சாளர்கள் கடைசி கட்டத்தில் நியூசிலாந்தை கட்டுப்படுத்தினர். நடுவரிசையில் க்ளென் பிலிப்ஸ் மட்டும் அதிரடி காட்டி 34 ரன்கள் எடுக்க, மற்ற பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. இறுதியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது.  இந்திய அணி தரப்பில் அறிமுக போட்டியில் விளையாடிய ஹர்சல் படேல் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதனை தொடர்ந்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராகுல், ரோஹித் கூட்டணி வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.   இருவரும் முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். டி20 போட்டிகளில் தொடர்ந்து 5-வது முறையாக இருவரும் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர், அதுமட்டுமல்லாமல் 5-வது முறையாக இருவரும் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துள்ளனர்.

ரோஹித் சர்மா 36 பந்துகளில் 56ரன்கள் (5 சிக்ஸர், ஒருபவுண்டரி), கே.எல்.ராகுல் 49 பந்துகளில் 65 ரன்கள் (2சிக்ஸர், 6பவுண்டரி) விளாசினர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், சவுதி வீசிய பந்தில் போல்ட் ஆனார். 18-வது ஓவரில் ரிஷப் பண்ட் 2 சிக்சர்கள் விளாசி ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். இந்திய அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட டி-20 தொடரில் 2-ல் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.  அறிமுகப் போட்டியிலேயே அசத்தலாகப் பந்துவீசி 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஸல் படேலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory