» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன்

திங்கள் 15, நவம்பர் 2021 10:33:28 AM (IST)



டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 

துபாயில் நேற்று இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூஸிலாந்து 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 18.5 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வென்றது. நியூஸிலாந்து இன்னிங்ஸில் பவுண்டரி, சிக்ஸா்களாக விளாசி அணியின் ஸ்கோரை அட்டகாசமாக உயா்த்தினாா் கேப்டன் வில்லியம்சன். ஆஸ்திரேலிய பௌலிங்கில் ஜோஷ் ஹேஸில்வுட் பேட்டிங் வரிசையை சரித்தாா். பின்னா் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வாா்னா் வலுவான அடித்தளம் அமைத்து உதவ, மிட்செல் மாா்ஷ் அதிரடியில் கிளென் மேக்ஸ்வெல் துணையுடன் வென்றது அந்த அணி. நியூஸிலாந்து பௌலிங்கில் போல்ட் மட்டும் விக்கெட் எடுத்தாா். 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் உலக அளவிலான போட்டிகளில் ஆஸ்திரேலியாவே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா  நேற்று வென்ற டி20 உலகக்கோப்பையையும் சேர்த்து அந்த அணி மொத்தம் எட்டு ஐ.சி.சி கோப்பைகளை தனதாக்கியுள்ளது. ஏற்கனவே 5 முறை 50 ஓவர் உலக கோப்பையையும், இரண்டு முறை ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையையும் கைப்பற்றி இருக்கிறது. இந்த சாதனை வரிசையில் 2-வது இடத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் (தலா 5 கோப்பை) அணிகள் உள்ளன. அதேபோல் ஐ.சி.சி. தொடர்களில் ‘நாக்-அவுட்’ சுற்றில் ஆஸ்திரேலிய அணி ஒரு போதும் நியூசிலாந்திடம் தோற்றதில்லை. இந்த ஆட்டத்தையும் சேர்த்து 5 முறை நியூசிலாந்தை பதம்பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory